சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமமுக ஒன்றியச் செயலாளர் சரவணன். தற்போது மானாமதுரையில் வசித்து வரும் இவர் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர்கள் சிலர், அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சரவணனின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : Vettik ,Sivagangai district ,Manavathar , Amigam leader,Vettik,killed,police walking,Manavathar,Sivagangai district
× RELATED ஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு