×

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 9ந் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, மூன்று பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ் இம்முறையும் கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஸ்பெயின் நாட்டின் முகுருசா, செரினாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

17 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 11 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். களிமண் தரையில் இம்முறையும் சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், முதல் நிலை வீரரான ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : French Open ,tennis tournament ,one ,Grand Slam ,tournaments ,Paris , French, tennis tournament, Grand Slam tournaments, begins ,Paris
× RELATED யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை...