×

அந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு...!

மலாக்கா: அந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் இன்று காலை 7.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

அந்தமானில் 4 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்படுவது கடந்த ஒரு வாரத்தில் இது 3-வது முறையாகும். 21-ம் தேதி நள்ளிரவு அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து 23-ம் தேதி காலையில் 6.09 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோல அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த மே 17ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : earthquake ,Andaman Nicobar Island , Andaman and Nicobar Island, Earthquake
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்