×

ஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: ஜூன் 28-ம் தேதி ஜப்பானில் பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச உள்ளதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தலில் 350 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 24-ம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி  ஜுன் 28, 29-ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் மோடி உரிமை கோரினார். 30ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி - 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்கின்றனர். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுவதாவது; ஒசாகா நகரத்தில் அடுத்த மாதம் 28, 29 –ந் தேதிகளில் ‘ஜி–20’ உச்சி மாநாடு நடக்கிறது. மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேச உள்ளனர். இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த முத்தரப்பு கூட்டத்தில் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், தடையற்ற வர்த்தக போக்குவரத்து தொடர்பான தங்கள் கருத்துகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்: பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம், அமெரிக்க மக்களின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினேன். மோடி, என் நண்பர். இந்தியாவுடன், அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த நல்லுறவு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Narendra Modi ,Trump ,visit ,Japan ,US ,Announcement ,meeting ,Washington White House , Japan, Prime Minister Modi, US President Trump, Meeting
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...