மாணவன் மீட்பு

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மதுரை மாவட்டம், பேரையூர், வஉசி தெருவை  சேர்ந்த  ரிஷிகுமார் (19), என்பதும்,  கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் 2ம் ஆண்டு படித்து வருவதும், இவருக்கு அடிக்கடி சுயநினைவு இழக்கும் நிலை இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல வழி தெரியாமல் திணறுவதாகவும் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் ரிஷிகுமாரை போலீசார் ஒப்படைத்தனர்.Tags : Student ,recovery
× RELATED திருவிக நகர் மண்டலத்தில் நோய்...