தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்

அண்ணாநகர்: ஐசிஎப் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 சிறுவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஐசிஎப், வில்லிவாக்கம், பூந்தமல்லி,  திருமுல்லைவாயல், திருவள்ளூர் ஆகிய இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். * திருவொற்றியூர் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த  சரவணன் (18), கோபு (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.Tags : boys ,robbery , Continued, robbery, 3 boys, caught
× RELATED காட்பாடியில் சுற்றித்திரிந்த 7 சிறுவர்கள் மீட்பு