சபரிமலை விவகாரத்தில் தலைகீழானது திட்டம் விதை போட்டது பாஜ; அறுவடை செய்தது காங்.: பினராய்க்கு கிடைத்தது பாடம்

திருவனந்தபுரம்: கேரளாவை பொறுத்தவரை இந்துக்களாக இருந்தாலும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும்,  பிரச்னைகளை மனதில் வைத்து ஓட்டு போடுவதில்லை. ஒரு முறை மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு வாக்கு போட்டால், அடுத்த  தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைப்பர். இந்த முறை நடந்தது சற்று வித்தியாசமானது. சபரிமலை விவகாரத்தால் பெரிதும் இந்துக்கள்  குறிப்பாக நாயர் சமூகத்தினர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, திருச்சூர் ஆகிய தொகுதிகளில் கண்டிப்பாக பாஜவை வெற்றி பெறச்செய்வர்  என்று  பலரும் நம்பியிருந்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லை. திருவனந்தபுரம் தொகுதியில் பிரபல மூத்த பாஜ தலைவர் கும்மனம் ராஜசேகரன்  நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் போட்டியிட்டார். சசிதரூர்  41.4 சதவீதம் ஓட்டுகளையும், ராஜசேகரன் 31.5 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற  முடிந்தது. மூன்றாவதாக இடதுசாரி முன்னணியை சேர்ந்த திவாகரன்  25.7 சதவீத ஓட்டுக்களை பெற்றார்.

இதுபோல, சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா தொகுதியில் காங்கிரசின் ஆன்டோ அந்ேதாணி 37.2%, வீணா ஜார்ஜ் 32.9% ஓட்டுகளை பெற்றனர். மூன்றாவதாக தான் பாஜவின் வேட்பாளர் சுரேந்திரன் 29.1%  ஓட்டுக்களை பெற்றார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சபரிமலை விவகாரத்தில் பாஜவுக்கு போட்டால், பினராய்க்கு பாடம் கற்பிக்க முடியாது; அவர் தான் சபரிமலை  விஷயத்தில் இந்துக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தார் என்று முடிவெடுத்து  இந்துக்கள் பலரும் காங்கிரசுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இதுபோல், இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினர் ஓட்டுக்கள் சிதறாமல் காங்கிரஸ் அணிக்கு விழுந்தது. இதனால்தான் பாஜ வெற்றி பெறாததுடன் டெபாசிட்டும் இழக்க நேர்ந்தது என்று  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பினராய் விஜயன் மறுப்பு
முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  கேரளாவில் இடதுமுன்னணிக்கு கிடைத்த தோல்வி தற்காலிகமானதுதான். இந்த  தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. தேர்தல் பிரசாரத்தின்ேபாது அந்த  காரணங்களை  எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது நாடாளுமன்ற ேதர்தல் என்பதால் காங்கிரசிற்கு வாக்களிக்க மக்கள்  தீர்மானித்திருக்கலாம். ராகுல்காந்தி ேகரளாவில் போட்டியிட்டதும் காங்கிரசிற்கு சாதகமாக அமைந்தது.  சபரிமலை விவகாரம் தேர்தலை பாதிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம் என்றார்.

Tags : Sabarimala ,GANGEN BENGER , Sabarimala , laid out, GANGEN BENGER
× RELATED கம்பெனி பதிவு செய்த விவகாரம் அதிமுக...