மணல் லாரியை பிடிக்க உதவி கமிஷனர் தடை கடுப்படித்த இன்ஸ்பெக்டர்

மலைக்கோட்டை மாநகரின் சிப்காட் பகுதி உள்ள காவல்நிலையத்திற்கு தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக புதிதாக புறநகர் பகுதியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் பொறுப்பேற்றார். இதில், கடந்த வாரம் அதிகாலை மைக்கில் பேசிய அந்த சரக உதவி கமிஷனர் அனைவரும் எனது செல்போனில் உடனே பேச வேண்டும் என உத்தரவிட்டார். இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய போலீசார் அனைவரும் வெலவெலத்து போனார்கள். அடித்துபிடித்து உதவி கமிஷனரின் செல்போனில் பேசிய போலீசார் இதற்கு தான் இந்த பில்டப்பா என எகிறினர். விசாரித்த போது, உதவி கமிஷனர் புறநகர் பகுதியில் இருந்த போது மணல் மூலம் அதிகளவில் மாமூல் வந்தது. அதுபோல் மாநகருக்குள் அவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இவரது அனுமதியுடன் மணல் லாரிகளில் கடத்தப்பட்டு வந்தது.

அன்றைய தினம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை நடத்தியதில் அனுமதி இன்றி மணல் எடுத்து சென்ற 4 லாரிகளை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணல் ஏற்றி வந்த டிரைவர்கள், உரிமையாளர் மூலம் உதவி கமிஷனருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மைக்கில் பேசிய உதவி கமிஷனர் செல்போன் எண்ணிற்கு பேச கூறியதை அடுத்து அனைத்து போலீசாரிடமும் இந்த பகுதிக்கு வரும் மணல் லாரிகளை நிறுத்தக்கூடாது என கூறியுள்ளார். ஆனால் இதனை  இன்ஸ்பெக்டர் ஏற்க மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வாகன சோதனை நடத்தி மணல் லாரிகள் சிக்கினால் வழக்கு கண்டிப்பாக பாயும் என இன்ஸ்பெக்டர் தடாலடியாக கூறியதை அடுத்து உதவி கமிஷனர் என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருகிறார்.

Tags : Inspector ,Commissioner ,Assistant Assistant , Sand Larry Assistant Commissioner, Prohibition, Inspector
× RELATED போக்சோ சட்டத்தில் கைதாவதை தடுக்க நாயை...