திட்ட அறிக்கை தயாரிப்பது, டெண்டர் விடுவது எப்படி? புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி

சென்னை: திட்ட அறிக்கை தயாரிப்பது, டெண்டர் விடுவது எப்படி? என்பது தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் விரைவில் பணியில் ேசருகின்றனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 700 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில் நேர்முகத்தேர்வு மூலம் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையில் டெண்டர் விடுவது எப்படி, திட்ட அறிக்கை தயார் செய்வது எப்படி?, சைட்டில் பணிபுரிகிற உதவி பொறியாளர்கள் ஒரிஜினல் மணல், சிமெண்ட் தானா, தரமான செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இது தொடர்பாக புதிதாக நியமிக்க உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், தலைமை வரை தொழில் அலுவலர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். இதில், கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவில் நடக்கும் திட்ட பணிகள் தொடர்பாக அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்கள். இந்த பயிற்சி  வகுப்பை தொடர்ந்து உதவி பொறியாளர்கள் விரைவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் சேருவார்கள். இதன் மூலம் பொதுப்பணித்துறையில் காலி பணியிடம் 500 ஆக குறைகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : assistant engineers , Project Report, Tender, Assistant Engineer, Training
× RELATED வளர்ச்சி திட்ட பணிகள் அறிக்கை...