×

ஹேப்பி... ஜூன் முதல் ஹேப்பி.... மோடி வெளிநாட்டு பயணம் விவரம் கசிந்தது

புதுடெல்லி: பிரதமர் மோடி அடுத்த மாதம் மேற்ெகாள்ள உள்ள அரசு முறை வெளிநாட்டு பயண விவரங்கள் வெளியே கசிந்துள்ளது.மக்களவை தேர்தல் பிரசாரத்தையொட்டி பிரதமர் மோடி, தனது வழக்கமான வெளிநாட்டு பயணத் திட்டங்களை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அவர் பிரதமராக  பதவியேற்க உள்ளார். இதையடுத்து, அடுத்த மாதம் முதல் அவர் பல்வேறு அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் விவரம் தற்போது வெளியே கசிந்துள்ளது.

இதன்படி, வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கும் மோடி, முதல் அரசு முறை பயணமாக ஜூன் 13ம் தேதி கிர்கிஸ்தான் செல்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, நாடு திரும்பும்  அவர், ஜூன் 28ல் ஜப்பான் செல்கிறார். அங்கு ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மோடி சந்திக்க உள்ளார்.அதன்பின்னர் ஆகஸ்டில் பிரான்ஸ், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கடுத்ததாக நவம்பரில் தாய்லாந்து, பிரேசிலுக்கு செல்கிறார். ஆனால், இந்த பயணத்திட்டம் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படவில்லை.

தாயிடம் இன்று ஆசி பெறுகிறார்
மக்களவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். அவர் வரும் 30ம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய தாயிடம்  ஆசி பெறுவதற்காக அவர் இன்று குஜராத் செல்கிறார். இதைத்தொடர்ந்து நாளை வாரணாசியில், தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க செல்கிறார். இதை அவரே தன–்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Modi , Happy,June , Modi, foreign ,leaked
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...