×

சட்டப்பேரவை தேர்தல் அருணாச்சல பிரதேசத்தில் 41 தொகுதியில் பாஜ வெற்றி

இடாநகர்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை  தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், அருணாச்சலில் உள்ள தாபோரிஜோ, தும்போரிஜோ, ராகா பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு  எண்ணிக்கை சற்று தாமதமானது. இதன் முழு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பாஜ 2 இடங்களில் வென்றதைத் தொடர்ந்து அக்கட்சி வென்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இதையடுத்து, இங்கு பாஜ தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது. ஐக்கிய ஜனதா தளம் 7, தேசிய மக்கள் கட்சி 5,  காங்கிரஸ் 4, அருணாச்சல் மக்கள் கட்சி 1, சுயேச்சை 2, மற்றவை 10 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

இத்தேர்தலில் முதல்வர் பீம காண்டு, துணை முதல்வர் சோவ்னா மெயின், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் காம்லங்  மோசாங், சுகாதாரத்துறை அமைச்சர் வாங்கி லோவங் உள்ளிட்ட பாஜ முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற போதிலும், அதன் மாநிலத் தலைவர் டாகாம் சஞ்சோய், பேரவை எதிர்க்கட்சி  தலைவராக இருந்த டாகாம் பரியோ ஆகியோர் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர்களிடம் வெற்றியை பறிகொடுத்தனர்.Tags : constituencies ,Arunachal Pradesh , Legislative, Election, Arunachal Pradesh,constituency
× RELATED அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து...