×

7 தொகுதிகளின் தோல்விக்கு பதிலளிக்க ராமதாஸ் மறுப்பு

திண்டிவனம்: மக்களவை  தேர்தலில் பாமக போட்டியிட்ட  7 தொகுதிகளில் தோல்வியடைந் தது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு ராமதாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். பாமக மாநில வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  குருவின் வெண்கல சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ராமதாஸ் பேசுகையில், `மிகப்பெரிய வெற்றியை மக்கள், பாஜகவிற்கு அளித்துள்ளனர். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். காடுவெட்டி குருவுக்கு சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும் கோனேரிகுப்பதில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள வெண்கல சிலை போலவே காடு வெட்டியிலும் குருவிற்கு முழு உருவ  வெண்கல சிலை வைக்கப்படும்’ என்றார்.  அப்போது, 7 மக்களவை தொகுதியிலும் பாமக வெற்றி பெறவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் கூற மறுத்துவிட்டார்.




Tags : Ramadoss , failure , 7 blocks, The refusal , answer, Ramadoss
× RELATED மக்களவை தேர்தலுக்கான பாமகவின்...