×

இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 5 கோடி போதை பொருள் பறிமுதல்: கடத்தல் கும்பல் தலைவன் கைது

சென்னை: இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ₹5 கோடி மதிப்பிலான போதை பொருள்   பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட கடத்தல் கும்பல் தலைவனையும் போலீசார் கைது  செய்தனர்.மும்பை, டெல்லி, சென்னை போன்ற இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இருந்து விமானம் மூலம் மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு சூடோஎபிட்ரின் என்னும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல்  தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து டில்லியில் ஒரு நபரையும், மும்பையில் 3 பேரையும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்து அவர்களிடம் இருந்து சூடோஎபிட்ரின் என்னும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட மயிலாப்பூரை சேர்ந்த சலீம் சேட் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்த போது சூடோஎபிட்ரின் என்னும் போதைப் பொருளை சென்னை சூளைமேட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் 49.5 கிலோ சூடோ எபிட்ரினை என்னும்  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ₹5 கோடி மதிப்புடையதாகும். இதைப்போன்று சென்னை புரசைவாக்கத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜீராம் விஷ்னோய் (39) என்பவரிடமிருந்து இருந்து ₹50 லட்சம் மதிப்பிலான ஹெராயினை மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்  செய்தனர்.

Tags : gang leader ,India ,Malaysia , 5 crore ,drug,India ,Malaysia
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…