×

மலேசிய விமானத்தில் இயந்திரக் கோளாறு

சென்னை: விமானிகளின் சாமர்த்தியத்தால் மூன்று விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 248 பயணிகள், 8 விமான சிப்பந்திகள் உட்பட 256 பேர் அதில் இருந்தனர். விமானம்  ஓடு பாதையில் ஓடி மேலே பறக்க முயன்றபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது தெரியவந்தது, உடனே விமானி விமானத்தை தரையில் இறக்கினார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து  விமானம் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் இருந்த 256 பேரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
Tags : Malaysian , Malaysian ,flight, Mechanical ,disorder
× RELATED தவிக்கும் தமிழர்களை அழைத்து வர துபாய் - சென்னை இடையே விமானம்