×

டான்செட் நுழைவுத் தேர்வு மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளான எம்இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் மற்றும் தொழில்சார் படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவுத்தேர்வு  நடத்திவருகிறது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 20 கல்லூரிகளுக்கு மட்டும் AUCET என்ற பெயரில் தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது  என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.அதைத்தொடர்ந்து ேம 2ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்குபின், தனி நுழைவுத்தேர்வு  நடத்தும் முடிவில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் பின்வாங்கியது. அன்றே டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அறிவித்தார்.

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 8ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை எம்பிஏ படிக்க 16,427 பேரும், எம்சிஏ படிக்க 4,672 ேபரும், எம்.இ, எம்.டெக்,  எம்.பிளான், எம்.ஆர்க் படிக்க 10,288 பேர் மொத்தம் 31,387 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்சிஏவுக்கான ஜூன் 22ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்பிஏ  படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி  வரையும்,  முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12  மணி வரையும் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இணையதளத்தில் விண்ணப்பிக்க ேம 25ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், விணணப்பிப்பதற்கான கடைசி நாளை, மே 31ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.



Tags : entrance examination , Dancet ,entry, selection
× RELATED ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு