×

சர்வதேச குழந்தைகள் காணாமல் போன தினம் 1673 குழந்தைகள் மீட்கப்பட்டதாக ஆர்பிஎப் கருத்தரங்கில் தகவல்

சென்னை: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஐ.ஜெ.எம் தொண்டு நிறுவனம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஐ.ஜெ.எம் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர்  அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பீரேந்திர குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே இணை ஆணையர் லூயிஸ் அமுதன்  மற்றும் ரயில்வே பாதுகாப்பு  படை அதிகாரிகள் பலர் கலந்து ெகாண்டனர்.

பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பீரேந்திரகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக வன்முறை மற்றும் குற்ற நடவடிக்கைகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறை  இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதுபோன்று பாதிப்புக்குள்ளானவர்களை மீட்கும் கடமை நம் அனைவருக்குமானது ஆகும். மேலும் இந்த கருத்தரங்கத்தில் மீட்கப்பட்ட குழந்தைகள் சிலர் கலந்து கொண்டனர்.  காணாமல் போன குழந்தைகள் தவறானவர்கள் கையில் கிடைத்தால் அவர்களது எதிர்காலம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் குழந்தைகளை பாதுகாக்க கூடுதல் முயற்சிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர்  ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அதிக குழந்தைகளை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.ஐ.ஜெ.எம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குரல்அமுதன் நிருபர்களிடம் கூறியதாவது: மனித கடத்தல் மூலம் 1673 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.


Tags : RPF Seminar ,children ,child disappearance , International, children, disappear, RFF seminar
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...