×

தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள்: அதிகாரிகள் அலட்சியம்

கூடுவாஞ்சேரி: சென்னை நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் பகுதிக்கு செல்லும் சிமெண்ட் சாலையோரம் தமிழக பொதுப்பணி துறைக்கு  சொந்தமான தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி நீண்ட காலமாக தூர்வாரி சீரமைக்கப்படாமல் வறண்டு காணப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்ட  சமூகவிரோதிகள், ஏரி நிலங்களை பிளாட் போட்டு, லட்சக்கணக்கில் விற்று வருகின்றனர். நந்திவரம் 5, 6 மற்றும் 7வது வார்டுகளை ஒட்டியுள்ள தாங்கல் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான வீடுகள் கட்டும் மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியின் மற்றொரு பகுதியில்  திறந்துவிடப்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு ரசாயன குப்பை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம், பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஏரி ஆக்கிரமிப்புகளை  அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ‘’நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து கட்டியுள்ள  வீடுகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மக்கள் கூறுகின்றனர்.


Tags : houses ,Tangle Lake , Buffalo lake, houses, officers
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...