×

பாங்காக்கில் இருந்து கடத்தி வந்த 24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார்

சென்னை: பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள்  சோதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சவார்டு நொட்டன் விடன் (24) என்ற வாலிபர் சுற்றுலா பயணியாக தாய்லாந்திற்கு சென்று, சென்னை திரும்பினார். இவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அவரது உடைமைகளை சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை.

சந்தேகம் தீராததால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் எடை 725 கிராம். சர்வதேச மதிப்பு ₹24 லட்சம். பிறகு சுங்க அதிகாரிகள் வாலிபரை கைது செய்து, தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Kerala ,Bangkok , 24 lakh , cash, transfers, Kerala, youth, trapped
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...