×

பாகிஸ்தானுடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கு 262 ரன்கள் இலக்கு

பிரிஸ்டோல்: பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுக்கு 262 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.பிரிஸ்டோலில்  நேற்று நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை  தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக், ஃபக்ஹர்  ஜமான்  ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள்தான்  எடுத்தனர். முகம்மது நபி பந்து வீச்சில்  ஜமான் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆஸம் சிறப்பாக  விளையாடி சதமடித்தார்.  அவர் 112 ரன்களுக்கும், இமாம் 32 ரன்களுக்கும்,  சோயிப் மாலிக் 44 ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர்.

மற்றவர்கள்  ஆப்கானிதான் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து  வெளியேறினர். அதனால் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த  பாகிஸ்தான் 262 ரன்கள் எடுத்தது.ஆப்கானிஸ்தான் தரப்பில்  முகம்மது நபி 3 விக்கெட்களும், ரஷித்கான், தவலத் ஜார்டன் ஆகியோர் தலா 2  விக்கெட்களும், அஃப்டாப் ஆலம், ஹமீத் ஹாசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர். அடுத்து 263 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன்  ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

Tags : World Cup ,campaign ,Pakistan ,Afghanistan , World Cup, training,Pakistan, Target ,Afghanistan
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...