இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம் தெ.ஆப்ரிக்கா 338 ரன்கள் குவிப்பு

கார்டிப்: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.கார்டிப்பில்  நேற்று நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - இலங்கை அணிகள்  மோதின. டாஸ்வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்  அய்டென் மார்க்ரம் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால்  ஆம்லா - டூ பிளிசிஸ்  ஜோடி 2வது விக்ெகட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்தவர்களும்  நன்றாக விளையாட  தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில்  7 விக்ெகட்கள்  இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

 அணியில் அதிகபட்சமாக டூ  பிளிசிஸ் 88 ரன்களும், ஆம்லா 65 ரன்களும், டூஸ்சென் 40ரன்களும் எடுத்தனர்.  பிரிடோரியஸ் 25 ரன்களுடனும்,  மோரிஸ் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். இலங்கை அணி தரப்பில் லாக்மல் , பிரதீப் ஆகியோர்  தலா 2 விக்கெட்களும்,  உடனா, மெண்டிஸ், டி சில்வா ஆகியோர் தலா ஒரு  விக்ெகட்டும் வீழ்த்தினர். இலங்கை அணி 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட  தொடங்கியது.

Tags : South Africa , Training,Sri Lanka, Teaprikka,scored
× RELATED மும்பையில் இன்று கடைசி போட்டி: டி20...