இங்கிலாந்து கேப்டன் காயம் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா

லண்டன்: பயிற்சியின் போது காயமடைந்த  இங்கிலாந்து கேப்டன் மார்கன், உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.உலக கோப்பை யை வெல்ல வாய்ப்புள்ள அணியாக  இங்கிலாந்து  அணி கருதப்படுகிறது. அந்த அணி இன்று ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதனால் போட்டி நடைபெற உள்ள சவுத்ஹாம்டனில் நேற்று  இங்கிலாந்து வீரர்கள் கேப்டன் இயன் மார்கன் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மார்கனின் இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.அதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பபட்டார்.

 இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், ‘பயிற்சியின் போது பீல்டிங் ெசய்த மார்கனின் விரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு முன்னேச்சரிக்கையாக  எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.காயத்தின் தன்மை, பாதிப்பு குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  பயிற்சி ஆட்டத்தில் மட்டுமின்றி, உலக கோப்பையின் முதல் போட்டி உட்பட சில போட்டிகளில் மார்கன் பங்கேற்பது சந்தேகம்  என்று கூறப்படுகிறது.உலக கோப்பையை வெல்ல நீண்ட காலமாக காத்திருக்கும் இங்கிலாந்து அணி, அதற்கான வாய்ப்பு ெ நெருங்கும் சூழலில் இச்சம்பவம் பின்னடைவாக கருதப்படுகிறது. மார்கன் அணியல் இடம் பெறாதபட்சத்தில் துணை கேப்டன்  ஜோஸ்  பட்லர் அணியை வழி நடத்தலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வீரரும் காயம்
இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னான்டோ கணுக்காலில் காயத்தால் அவதிப்படுகிறார். அவருக்கு நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் ஏற்பட்டது. அதனால் நேற்று தென் ஆப்ரிக்காவுடன் நடைபெற்ற பயிற்சி  ஆட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : England ,match , England, captain , Participate , first, match
× RELATED தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து