சட்டப் பேரவையில் சதம் அடித்தது பாஜ

அகமதாபாத்: பாஜ ஆளும் குஜராத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு காலியாக இருந்த 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு தாவிய 3 எம்எல்ஏக்கள் உள்பட 4 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தரங்கதாரா, மனாவதார், உன்ஜா, ஜாம்நகர் (ரூரல்) ஆகிய 4 பேரவை தொகுதிகளிலும் பாஜவினர் வெற்றி பெற்றனர்.

தரங்கதாராவில் பர்சோதம் சபாரியாவும், ஜாம்நகரில் ராகவ்ஜி படேலும், மனவதாரில் ஜவகர் சவ்டாவும், உன்ஜாவில் ஆஷாபென் படேலும், வெற்றி பெற்றனர். இதன் மூலம் குஜராத் சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 70க்கும் அதிகமான இடங்களை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

Tags : Bhatt ,assembly , Law Assembly, Same, Hit, Bhaj
× RELATED ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட...