எதிர்ப்பால் கிடைத்த கூடுதல் தொகுதிகள்: அசாமில் அசத்திய பாஜ

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2014ம் ஆண்டு தேர்தலின்போது பாஜ இங்கு 7 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இம்மாநிலத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பாஜவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை செய்தன. ஆனால், இந்த தேர்தலில் முன்பு பெற்றதை விட கூடுதலாக 2 தொகுதிகளை பிடித்து பாஜ அசத்தி இருக்கிறது. இங்கு அது 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மூன்று இடங்களையும், ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.


Tags : Assamese ,Assam , opposition,additional, constituencies, Assamese in Assam, Bhaj
× RELATED கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை