அசாமில் குண்டு வெடிப்பு

ஹைலகன்டி: அசாமில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அப்பகுதியில் இருந்த மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. அசாம் மாநிலம்,  ஹைலகன்டி மாவட்டத்தில் உள்ள கச்சூரில் அமைந்துள்ள ஒரு மசூதி அருகில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால், மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதால் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


Tags : Assam , Assam, bomb, explosion
× RELATED ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே...