குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்...!

டெல்லி: இன்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். சந்திப்பின் போது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இன்று மாலை 2014-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது 16-வது மக்களவை தீர்மானத்தை கலைப்பதற்காக தீர்மானமானது நிறைவேற்றப்பட்டு அதன் பிறகு அவர்கள் குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் ஆகியோரும் குடியரசுதலைவரை சந்திக்கின்றனர்.  

ஏற்கனவே பாஜக நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனைக்கு டெல்லியில் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று இரவு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் நாளை எந்தெந்த தலைவர்களுக்கு, எந்தெந்த எம்.பி.களுக்கு எந்தெந்த துறைகளை வழங்குவது குறித்த முடிவுகள் நாளை நடைபெற கூடிய தேசிய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க வாயுப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாதம் 30-ம் தேதிக்குள் பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Modi ,President , President, Prime Minister Modi, rule, right
× RELATED தேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெருக்கமானவர்