×

திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த பாதுகாப்பு கவசம் ; கவிஞர் வைரமுத்து

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பாராட்டு தெரிவித்த அவர், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த பாதுகாப்பு கவசம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திகைப்புக்குரிய வெற்றி, திமுக வியப்புக்குரிய வெற்றி என்றும் திமுகவின் வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் வைரமுத்து கூறினார். 


Tags : Vairamuthu ,alliance ,DMK , DMK leader Stalin, poet Vairamuthu, security guard
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...