'எப்போது ராஜினாமா செய்வீர்கள் விஜயபாஸ்கர்' : செந்தில் பாலாஜி கேள்வி

கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி 37 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை விமர்சித்த, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் நின்றாலும் சரி, கரூர் மக்களவை தொகுதியில் நின்றாலும் சரி, அவர் டெபாசிட் பெற்றுவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது; எப்போது ராஜினாமா செய்வீர்கள் என்று விஜயபாஸ்கருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய பாஸ்கர் ராஜினாமா செய்தால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும், அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள், திமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.


× RELATED போக்குவரத்து துறையில் முறைகேடு வழக்கு செந்தில் பாலாஜி மனு வாபஸ்