எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும் : தங்க தமிழ்ச்செல்வன்

தேனி : எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும் என்று  தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்றது பற்றி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்தார். அப்போது மற்றவர்களை தோற்க வைத்து விட்டு மகனை மட்டும் ஓபிஎஸ் ஜெயிக்க வைத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதியில் மகனை ஜெயிக்கவைத்த ஓபிஎஸ், பெரியகுளம், ஆண்டிபட்டியை கைவிட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories:

>