×

மக்களவை தேர்தல்: தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் தோல்வி..!

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே 19ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதில் தேமுதிகவுக்கு நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் வட சென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ், விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி, திருச்சி தொகுதியில் இளங்கோவன் போட்டியிட்டனர். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

அதன்படி; * கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ்; 3,21,794 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. திமுக சார்பில் போட்டியிட்ட கவுதம சிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
* திருச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர்: 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
* விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 3,16,329 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
* வட சென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகாபுரம் மோகன்ராஜ்; 1,29,468 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


Tags : Lok Sabha ,election ,constituencies ,Dumudiya , Lok Sabha polls, failures, failure
× RELATED மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கடிதம்