×

வட மாநிலங்கள் காலை வாரினாலும், காங்கிரசுக்கு 'கை'கொடுத்த தென் மாநிலங்கள்

டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதன்மூலம் மோடி 2-வது முறையாக பிரதமராகிறார். இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சியை தனித்து வெற்றி பெற்றது 52 தொகுதிகளில்தான். கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனியாக வெற்றி பெற்றது 41 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய் விட்டது.

இருப்பினும் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கைகொடுத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுத் தந்திருக்கும் மாநிலம் கேரளா. அங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 9-ல் வெற்றி கிடைத்திருக்கிறது. பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ், மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களைப் பிடித்திருக்கிறது.  

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 52 தொகுதிகளில், புதுச்சேரி உட்பட 28 தொகுதிகள் தென்னிந்தியாவில் இருந்து கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வடமாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல்காந்தி படுதோல்வி அடைந்தார். ஆனால் தென் மாநிலமான கேரளாவின் வயநாடு தொகுதியில் சுமார் 7 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.

Tags : states ,Northern Provinces ,India , Lok Sabha election, BJP, Congress
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து