×

தேர்தல் படுதோல்வியால் டிடிவி.தினகரன் ‘அப்செட்’ நம்பி வந்தவர்கள் ஏமாற்றம்

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அப்செட் ஆகியுள்ளார். தேர்தல் தோல்வியால் தினகரனை நம்பி வந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவும் வெளியிடப்பட்டது. இதில் திமுகவே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை பெற்றது.

அதிமுக தோல்வியை சந்தித்தது. இதேபோல், தமிழகத்தில் அமமுக கணிசமான வாக்குகளை பெரும் என தேர்தலுக்கு முன்பாக கணிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 முதல் 18 தொகுதிகளிலும் வெற்றி பெருவதற்கான முனைப்பில் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில், அமமுக வேட்பாளர்கள் அனைவரும் நேற்று வெளியான தேர்தல் முடிவில் பெரும் தோல்வியை சந்தித்தனர். எந்த தொகுதியிலும் வெற்றியை எட்டமுடியவில்லை. இதை சற்றும் எதிர்பாராத அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளார். அதிமுகவின் மேல் மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தியே பெரும்பாலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த தினகரன் அதிமுகவிற்கு விழும் வாக்குகளில் பெரும்பாலானவை தங்களுக்கு விழும் எனவும் கணித்திருந்தார்.

ஆனால், இதற்கு எல்லாம் எதிர்மறையாக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் அமமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது டிடிவி.தினகரனை அப்செட் ஆக்கியுள்ளது. இதேபோல், எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ள வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக புதுக்கட்சிகள் எல்லாம் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்வி குறித்து ஓரிரு தினங்களில் தங்களின் வேட்பாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Tags : Dt.Dinakaran , The election fiasco, DTV Dinakaran, 'Abset', is disappointing
× RELATED தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில்...