×

ஸ்டாலின் தலைவரான பின் நடந்த முதல் தேர்தலில் இமாலய வெற்றி: திமுக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த முதல் தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக செயல் தலைவராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு திமுகவில் பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்பட்டன.பொதுமக்களை சந்திப்பதற்காக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கிராமங்களில் மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டார். பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். இதன் அடுத்தகட்டமாக, கிராம சபை கூட்டங்களை நடத்தினார். மாவட்ட செயலாளர்கள், மாநில பிரதிநிதிகள், பகுதி பிரதிநிதிகளை கிராம சபை கூட்டங்களை கூட்டச்செய்து மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொண்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் புதிய உத்தியை கையாண்டார். கலைஞர் இல்லாத நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக  தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.இதன் காரணமாக தமிழகத்தில் திமுக தலைமையில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 24 பேர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியை தோற்க வைத்தனர். கலைஞர் இல்லாத முதல் தேர்தலிலேயே மு.க.ஸ்டாலின் தனது முத்திரையை பதித்து இமாலய வெற்றி பெற்றது தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



Tags : Stalin ,victory ,election ,volunteers ,Himalayan ,DMK , Stalin's , election ,Himalayan, DMK
× RELATED நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...