×

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி: மீண்டும் திமுக கோட்டை என நிரூபணம்

சென்னை: சென்ைன, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த மாவட்டங்கள் திமுக கோட்டை என நிரூபணமாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கி மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரும்புதூர் ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மத்திய சென்னையில் திமுக சார்பில் தயாநிதி மாறன், பாமக சார்பில் சாம்பால், மக்கள்நீதி மையம் சார்பில் கமீலா நாசர், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன், எஸ்டிபிஐ கட்சி சார்பில் தெஹ்லான் பாகவி, வட சென்னையில் திமுகவில் கலாநிதி வீராசாமி, தேமுதிகவில் அழகாபுரம் மோகன்ராஜ், மக்கள் நீதி மையம் சார்பில் மவுரியா, நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள், அமமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் போட்டியிட்டனர்.தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், மக்கள் நீதி மையம் சார்பில் ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரின், பெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, பாமக சார்பில் வைத்தியலிங்கம், மக்கள் நீதி மையம் சார்பில் சிவக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திரன், அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயக்குமார், அதிமுக சார்பில் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிச்செல்வி, மக்கள் நீதிமையம் சார்பில் லோகரங்கன், அமமுக சார்பில் பொன்.ராஜா, காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவரஞ்சனி, அமமுக சார்பில் முனுசாமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களை எதிர்த்து போட்டி மற்ற கட்சி வேட்பாளர்களை விட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.குறிப்பாக, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து ஆயிரத்து 520 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சாம்பால் வெறும் 1,47,391 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் கமீலா நாசர் 92 ஆயிரத்து 229 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 30 ஆயிரத்து 880 வாக்குகளும், அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐயின் வேட்பாளர் தெகலான் பாஹவி 23 ஆயிரத்து 747 வாக்குகளும் பெற்றனர்.

அதில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2.86 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதே போன்று பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு , திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் திமுக கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.

30 பேர் டெபாசிட் காலி
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து 30 பேர் போட்டியிட்டனர். அதில், பாமக வேட்பாளர் உட்பட 30 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதேபோல, வடசென்னையில் திமுக வேட்பாளரை எதிர்த்து 22 பேர் போட்டியிட்டனர். அதில் தேமுதிக வேட்பாளர் உட்பட அனைவருமே டெபாசிட் இழந்துள்ளனர். தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனை தவிர அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, மநீமக வேட்பாளர் ரங்கராஜன் உள்ளிட்ட 38 பேர் டெபாசிட் இழந்தனர். திருவள்ளூரில் காங்கிரஸ் ஜெயக்குமாரை வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை தவிர 18 பேர் டெபாசிட் இழந்தனர். காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுவைத் தவிர 9 பேர் டெபாசிட் இழந்தனர். பெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

அனைத்துதொகுதிகளிலும் திமுக வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 வேட்பாளர்களை களம் இறக்கியது. உதய சூரியன் சின்னத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, பெரம்பலூரில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார், நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் ேதசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.மொத்தத்தில் திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நூறு சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தவந்தனர்.

Tags : DMK ,tens of thousands ,Kanchipuram district ,stronghold , Kanchipuram district, Chennai, DMK , again
× RELATED கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா...