×

சட்டமன்ற இடைத்தேர்தல் திருப்போரூர், பூந்தமல்லி, பெரம்பூர் திமுக வேட்பாளர்கள் வெற்றி முகம்

சென்னை: சட்டசபை இடைத்தேர்தலில் திருப்போரூர், பூந்தமல்லி, பெரம்பூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர். திருப்போரூர் இடைத்தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் இதயவர்மன், அதிமுக சார்பில் ஆறுமுகம் உள்பட 10 கட்சியினர் போட்டியிட்டனர். இதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த இமயவர்மன் முடிவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.  பூந்தமல்லி தொகுதி: தமிழக சட்டப் பேரவை தொகுதியில் ஒன்றான பூந்தமல்லி(தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. அப்போதிருந்தே திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி முன்னணியில் இருந்தார். இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது. நேற்று இரவு 9 மணியளவில் 26 சுற்றுகள் எண்ணி முடிந்தன.

இறுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 57715 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.பெரம்பூர் தொகுதி: பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரண்டு முறை வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.  நேற்று மாலையில் தான் வேகமாக எண்ணும் பணி தொடங்கியது. 11 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 52,987 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அவருக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது.அமமுகவின் முக்கிய பிரமுகரான ெவற்றிவேல் ெவற்றிைய நழுவவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Assembly election ,Thripperur ,Poonamalle ,Perambur DMK , Assembly, Election, Tirupoorur, Poonamalle, Perambur
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...