×

பாஜ அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டு எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டது முதலே பாஜக முன்னிலை பெற்றது. அதே போல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். நாடு முழுவதும் அந்தந்த மாநில பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதலே தொண்டர்கள் கூட தொடங்கினர். தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புக்களை பரிமாறிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேளம் அடித்து ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அங்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று பிற்பகலில் 300க்கும் அதிகமான தொண்டர்ள் கூடியிருந்தனர். தொடர்ந்து நேற்று மாலையிலும் தொண்டர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடினர்.



Tags : Volunteers celebration ,office ,BJP , office, BJP Celebration , volunteers
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...