×

டாமன் டையுவிலும் பாஜ

டாமன், மே 24: டாமன் டையு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ தொகுதியை கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் யூனியன் பிரதேசமான டாமன் டையுவில் உள்ள ஒரே தொகுதியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது.

இந்த கட்சியின் வேட்பாளர் லாலுபாய் படேல் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் கேதன் படேலை 9,942 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜ வேட்பாளர் 37,586 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 27,643 வாக்குகளும் பெற்றனர். இது தவிர சுயேச்சை வேட்பாளர் பாபு பாய் படேல் 19,938 வாக்குகள் பெற்றார்.

Tags : Daman Dyuwal , Daman Diu, Bhaj
× RELATED ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய...