சொல்லி அடித்த தொழில்முறை பிரசாரம்! உமர் அப்துல்லா பாராட்டு

பாஜக வெற்றிக்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் தொழில்முறை பிரசாரமே காரணம் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மையாகிவிட்டது. பாஜ மற்றும் கூட்டணி கட்சிகள் அபார வெற்றியை குவித்துள்ளன. சரியான வெற்றிக் கூட்டணியை அமைத்ததுடன் மிக நேர்த்தியான தொழில்முறை பிரசாரத்தால் சொல்லி அடித்துள்ள பிரதமர் மோடி, அமித்ஷாவை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அற்புதமான ஆட்சியைக் கொடுங்கள்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Tags : Omar Abdullah , Telling, professional, promotion! Omar Abdullah, praise
× RELATED கேட்பாரற்று கிடந்த செல்போனை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு