×

வெற்றி அடையாதவர்கள் எல்லாம் தோற்றவர் அல்ல: புதுவித பாணியில் மம்தா வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும், கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் பாஜ மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர், சுரேஷ் பிரபு, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஷாநவாஸ் உசேன் உள்ளிட்டோர் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அதில், ‘இது மோடியின் சிறப்பான தலைமைக்கும் அமித் ஷாவின் செயல்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
இது தேர்தல் அல்ல; மோடி சுனாமி. இது நிலச்சரிவு போன்ற நிகழ்வு அல்ல; நாடு முழுவதும் சுழன்று அடித்த அரசியல் சுனாமி.

 மோடி தலைமையிலான செயல்பாடு, தொலைநோக்கு, தலைமை, கடின உழைப்பு, வளர்ச்சி திட்டத்துக்கு கிடைத்த வெற்றி’ என புகழ்ந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே நேரம், வெற்றி அடையாதவர்கள் அனைவரும் தோற்றவர்கள் அல்ல. எங்களைப் பற்றிய முழுமையான ஆய்வு செய்து கொண்ட பின்னர் அது குறித்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்’ என பதிவிட்டுள்ளார்.


Tags : All ,losers ,Mamta , Success, Not Superman, Everything, Loss, is not
× RELATED அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக 5வது முறையாக கண்ணையா தேர்வு