×

தேர்தலில் தோல்வியடைந்த பவார் குடும்பத்தின் முதல் வாரிசு

தேர்தலில் தோல்வியடைந்த சரத் பவார் குடும்பத்தின் முதல் வாரிசாக உருவெடுத்திருக்கிறார் பார்த் பவார். சரத் பவாரின் அண்ணன் மகனும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் மகன் பார்த் பவார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய பார்த் பவார், தனது தந்தை மூலம் சரத் பவாருக்கு நெருக்கடி கொடுத்து புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தொகுதியை பெற்றார். இது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சரத் பவார் கடந்த 50 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவர் இதுவரை தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்தது இல்லை. இதேபோன்று அஜித் பவார், சுப்ரியா சுலே ஆகியோரும் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த பெருமையை பார்த் பவாரும் தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த சரத் பவார் குடும்பத்தின் முதல் வாரிசாக பெயர் பெற்றிருக்கிறார் பார்த் பவார். மாவல் தொகுதியில் அவரை சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங்க் பர்னே சுமார் இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது சரத் பவாரை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதியில் முதலில் பின்தங்கியிருந்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் அவர் கூடுதல் வாக்குகளை பெற்று பாஜ வேட்பாளர் காஞ்சன் குல்லை பின்னுக்குத் தள்ளினார். இந்த தொகுதியில் சுமார் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சுப்ரிய சுலே வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரத் பவார் கடந்த 50 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவர் இதுவரை தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்தது இல்லை.

Tags : Pawar ,successor ,election , Pollard failed, Pawar's family, first successor
× RELATED ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா...