×

ஜார்கண்டில் பாஜ ராசி 12

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜ கடந்த முறையை போல் 12 இடங்களை மீண்டும் பிடித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2014 மக்களவை தேர்தலில் பாஜ 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் 2 இடங்களை கைப்பற்றின. இம்மாநிலத்தில் பல பகுதிகள் மாவோயிஸ்ட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவை.

இதனால், இங்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இங்கு பாஜ இந்த முறையும் 12 இடங்களை பிடித்துள்ளது. சிங்பும் தொகுதியை காங்கிரஸ் பிடித்துள்ளது. இந்த முறை காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதனால், பாஜ.வுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அதையும் மீறி, 12 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது. பாஜ மூத்த தலைவரும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா, ஹசாரிபாக் தொகுதியில் வெற்றி பெற்றார். இதே தொகுதியில் இதற்கு முன்பு இவரது தந்தை யஸ்வந்த் சின்ஹா 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

9வது வெற்றியை நழுவவிட்ட சிபு:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன், தும்கா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இவர் 4,37,333 வாக்குகள் பெற்று 47,590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் சுனில் சோரன் 4,84,923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து 8 முறை இங்கு வெற்றி பெற்ற சிபுசோரன் இந்த முறை தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bhajan Rasi 12 ,Jharkhand , Jharkhand, Bhajah, Rasi 12
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு