மக்களவையில் நுழையும் 3வது பெரிய கட்சி திமுக

17வது மக்களவைத் தேர்தல் முடிவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3வது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. பாஜ 303 இடங்களுடன் அறுதிப்பெரும்பான்மை பெற்று முதலிடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி 53 இடங்களுடன் 2வது இடம் பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 38 இடங்களை அள்ளியது. இதில் திமுக களமிறங்கிய 24 தொகுதிகளையும் வசப்படுத்தி மூன்றாவது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்றுள்ளது. 4வது இடத்தை ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது. இக்கட்சியும் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

× RELATED தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை...