×

நடிகை ரோஜா வெற்றி: அமைச்சராக வாய்ப்பு

ஆந்திராவில் ராயலசீமா பிராந்தியத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார்.

எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அப்போது ரோஜா மொத்தம் 1,58,201 வாக்குகள் பெற்றார்.

ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு தாவினார். ஜெகன் மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். அதனால், இக்கட்சி இப்போது ஆட்சியை பிடித்துள்ளதால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tags : Actress ,Minister , Actress Rose, Win, Minister, Opportunity
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...