×

புதுச்சேரி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக ெவற்றி பெற்றது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடந்தது. இதில் வெங்கடேசன் (திமுக), நெடுஞ்செழியன் (என்ஆர் காங்கிரஸ்), கவுரி (நாம் தமிழர் கட்சி), முருகசாமி (அமமுக) உள்பட 8 வேட்பாளர்கள் ேபாட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.

முடிவில் என்ஆர் காங்., வேட்பாளர் நெடுஞ்செழியனை விட திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1539 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 10,906. நெடுஞ்செழியன் 9367 வாக்குகள் பெற்றுள்ளார்.  தட்டாஞ்சாவடி தொகுதி ரங்கசாமியின் நீண்டகால கோட்டையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் என்ஆர் காங்கிரசின் கோட்டையை தகர்த்து திமுக இத்தொகுதியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK ,win ,Puducherry , Puducherry, bypoll, DMK, win
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...