×

கன்னியாகுமரியில் வசந்தகுமார் வெற்றி மீண்டும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல்

நெல்லை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் நிலை உருவாகி உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. நேற்று  வாக்கு எண்ணிக்கை நடந்தது. கன்னியாகுமரி தொகுதியில் தற்போதைய எம்பி. மற்றும் மத்திய அமைச்சரான பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஒவ்வொரு சுற்றிலும் முந்தி வந்தார். தொடர்ந்து முன்னிலை வகித்த அவர் அமோக வெற்றி ெபற்றார். இதனால் வசந்த்குமார், நாங்குநேரி தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உறுதியாகி உள்ளது. எனவே நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : by-election ,Vasanthakumar ,Kanyakumari ,constituency , Kanyakumari, Vasanthakumar, Victory, Election
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...