×

மக்களவைத் தேர்தல் 2019..: 28,000 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிய அன்புமணி ராமதாஸ்! 7 தொகுதியிலும் பாமகவுக்கு தோல்வி முகம்

தருமபுரரி; தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸூம் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கிடையே சரிசமமான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சரிக்கு சமமான போட்டியில் முன்னிலை இருந்து வந்தனர். இதையடுத்து, சற்று முன்னிலை வகித்த அன்புமணி ராமதாஸ், தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பிற்பகல் நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். திமுக வேட்பாளர் செந்தில் குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி வேட்பாளர்களும் தோல்வியடையும் நிலையில் உள்ளனர். இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் சோக அலை வீசி வருகிறது.


Tags : Lok Sabha ,election ,Dhammani Ramadoss , Lok Sabha election, Anbumani Ramadoss, Pamaku
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...