×

344 இடங்களில் பாஜக முன்னிலை... 89 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை... மாநில வாரியாக முன்னிலை விவரம் உள்ளே...

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 344 இடங்களிலும், காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னணி நிலவரம் முழு விவரம்;

உத்திரபிரதேசம் 80/80

பாஜக - 58
பகுஜன் - 21
காங்கிரஸ் - 1

மகாராஷ்டிரா 48/48

பாஜக - 44
காங்கிரஸ் - 3
மற்றவை - 1

மேற்குவங்கம் 42/42

திரிணாமூல் - 23
பாஜக - 17
மற்றவை - 2

தமிழ்நாடு 39/39

திமுக - 37
அதிமுக - 2

பீகார் 40/40

பாஜக 38
காங்கிரஸ் 2

மத்தியபிரதேசம் 29/29

பாஜக 28
காங்கிரஸ் 1

கர்நாடகா 28/28

பாஜக 23
காங்கிரஸ் 4
மற்றவை 1

குஜராத் 26/26

பாஜக - 26
காங்கிரஸ் - 0

ஆந்திரபிரதேசம் 25/25

ஒய்எஸ்ஆர் - 25
தெலுங்குதேசம் - 0

ராஜஸ்தான் 25/25

பாஜக - 24
காங்கிரஸ் - 1

ஒடிசா 21/21

பிஜேடி - 12
பாஜக - 9

கேரளா 20/20

காங்கிரஸ் - 19
இடதுசாரி - 1
பாஜக - 0

தெலுங்கானா 17/17

டிஆர்எஸ் - 9
பாஜக - 4
காங்கிரஸ் - 4

அசாம் 14/14

பாஜக - 10
காங்கிரஸ் - 1
மற்றவை - 3

ஜார்கண்ட் 14/14

பாஜக - 11
காங்கிரஸ் - 2
மற்றவை - 1

பஞ்சாப் 13/13

காங்கிரஸ் - 10
பாஜக - 2
ஆம் ஆத்மி - 1

சத்தீஸ்கர் 11/11

பாஜக - 9
காங்கிரஸ் - 2

ஹரியானா 10/10

பாஜக - 9
காங்கிரஸ் - 1

டெல்லி 7/7

பாஜக - 7
ஆம் ஆத்மி - 0
காங்கிரஸ் - 0

ஜம்மு காஷ்மீர் 6/6

பாஜக - 3
காங்கிரஸ் - 3
மற்றவை - 0

உத்தரகாண்ட் 5/5

பாஜக - 5
காங்கிரஸ் - 0

இமாச்சலபிரதேசம் 4/4

பாஜக - 4
காங்கிரஸ் - 0

கோவா 2/2

பாஜக - 4
காங்கிரஸ் - 0

அருணாச்சலபிரதேசம் 2/2

பாஜக - 2
காங்கிரஸ் - 0

சண்டிகர் 1/1

பாஜக - 1
காங்கிரஸ் - 0

அந்தமான்நிக்கோபர் 1/1


பாஜக - 1
காங்கிரஸ் - 0

லட்சத்தீவு 1/1

காங்கிரஸ் - 1
பாஜக - 0

டாமன் டையூ 1/1

பாஜக - 1
காங்கிரஸ் - 0

மிசோரம் 1/1


மற்றவை - 1
பாஜக - 0
காங்கிரஸ் - 0

சிக்கிம் - 1/1


மற்றவை - 1
பாஜக - 0
காங்கிரஸ் - 0

தாத்ரா நாகர்ஹாவேலி 1/1

பாஜக - 1
காங்கிரஸ் - 0

Tags : BJP ,Congress , BJP, PM Modi, Congress, Rahul Gandhi, Tamilnadu, DMK, MK Stalin, Parliamentary Elections, Votes
× RELATED சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு...