×

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கனிமொழி எம்பி தெரிவித்தார். திமுக எம்பி கனிமொழி நேற்று பிற்பகல் 1.30 மணி விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வாக்குப்பெட்டிகள் மற்றும் இயந்திரங்களை தேர்தல் ஆணைம் தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் செய்தனர். வேட்பாளர்களுக்கோ அரசியல் கட்சியினர்களுக்கோ தெரிவிக்காமல் தனியார் கார்களில் கொண்டு சென்றனர்.

பல்வேறு ஓட்டல்கள், விடுதிகள் போன்ற பொதுஇடங்களில் கூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பல சந்தேகமும் கேள்விகளும் உருவாகியுள்ளது. இது மிகத் தவறான முன்உதாரணம். இப்படி இருக்கக்கூடாது என எதிர்கட்சிகள் ஒட்டு மொத்தமாக சந்தித்து மனு கொடுத்தோம். தேர்தல் ஆணையம் எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை அங்கு நடந்த கலவரங்களுக்கு காரணமான பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும். அதற்கு அரசாங்கமும் காவல்துறையும்தான் காரணம் என்பதை முகிலன் என்பவர் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். அதன் பின்பு அந்த முகிலன் என்ன ஆனார் என்பது இன்றுவரை தெரியவில்லை. அதுபற்றி யாருமே கேள்வி எழுப்ப முடியாத சூழ்நிலை இருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நீர்வளத்துறைக்கென்று தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளது பற்றி, தேர்தல் முடிவு வெளியான பின்பு நான் பதில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,Sterlite ,interview , DMK rule, sterile, gunfire, background, punished, kanamkram MB
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்