கமல் நாக்கை அறுப்பேன் என்று பேசிய ராஜேந்திர பாலாஜி மீது கோவை கமிஷனரிடம் புகார்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிட்கோ சிவா தலைமையிலான கட்சியினர் 0க்கும் மேற்பட்டோர் கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.  கமல்ஹாசனுக்கு  கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது வேலியே பயிரை மேய்வதற்கு சமம்.

இதனை தொடர்ந்து கடந்த 16ம் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இது, ராஜேந்திரபாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுத்த ராஜேந்திரபாலாஜி மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.× RELATED டிவி நிரூபரின் கேமராவை உடைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி