×

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமாகா இருக்கும்: இப்தார் நோன்பு திறப்பில் ஜி.கே.வாசன் பேச்சு

சென்னை:   தமாகா சிறுபான்மை அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை அணி மாநில தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இதில், மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், முனவர் பாட்ஷா, ரயில்வே ஞானசேகரன், ஜவஹர் பாபு, சைதை நாகராஜன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், விக்டரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக எப்போதும் தமாகா இருக்கும். கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் நான் பேசும் போது, ‘கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு எதிரான மாற்று கருத்து வரக்கூடாது’ என்பதை சுட்டிக்காட்டினேன்.  சிறுபான்மையினரின் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவேன். இப்தார் நோன்பு நாங்கள் இப்போது நடத்தவில்லை. ஜி.கே.மூப்பனார் காலத்தில் இருந்தே செய்து வருகிறோம். அவரது வழியில் சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக தமாகா தொடர்ந்து பாடுபடும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dhamma ,minority ,GK Vasan , For Minority People, Defense Fort, Thamana, Iftar Fast, Opening, GK Vasan
× RELATED திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள்...