×

ஜாலியன் வாலாபாக் தியாக மண்: தமிழக டிஜிபியிடம் ஒப்படைப்பு

நெல்லை: சுதந்திரபோராட்ட வீரர் ஜாலியன் வாலாபாக் நிகழ்விடத்திற்கு அதன் நூற்றாண்டான ஏப்ரல் 13ம்தேதி சமூகநல ஆர்வலர் பூ.திருமாறன், செங்கோட்டை ராம்மோகன் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். பனைவிதைகளை பஞ்சாப் மண்ணில் நடவு செய்து, பல்லாயிரக்கணக்கான சத்தியாகிரகிகள் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய புனித மண்ணை மியூசியத்தில் உலக சுற்றுலா பயணிகள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் திருமாறன், ராம்மோகன், நன்னன் ஆகியோர் சந்தித்து தங்கள் திட்டங்களை விவரித்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரனை சென்னையில் திருமாறன், ராம்மோகன் சந்தித்து ஜாலியன் வாலாபாக் புனித மண்ணை ஒப்படைத்தனர். அவர்களை டிஜிபி பாராட்டினார்.

வரலாற்றில் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் விதமாக ஜாலியன் வாலாபாக் தியாக மண்ணை நெல்லை மாவட்டம் ஆலங்குளம், தாலுகா வெங்கடாம்பட்டி கிராமத்தில், டிரஸ்ட் இந்தியா பள்ளி வளாகத்திலும், செங்கோட்டை ஜெயேந்திரா பள்ளி வளாகத்திலும் பார்வைக்காக ஸ்தூபி வடிவில் வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றன. ஜாலியன் வாலாபாக் தியாக ஸ்தூபியை திறந்து வைத்திட டிஜிபி ராஜேந்திரனுக்கு பூ.திருமாறன், ராம்மோகன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். மேலும் தியாக பூமியான நெல்லையில் கப்பலோட்டிய சிதம்பரம், மகாகவி பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், செங்கோட்டை சட்டநாத கரையாளர், பூலித்தேவன், வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் வாழ்ந்து மறைந்த இடத்தில் ஜாலியன் வாலாபாக் தியாக மண்ணை நினைவுச்சின்னமாக வைத்திடுவதே தங்கள் திட்டம் என திருமாறன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்று இம்மாத இறுதி ஞாயிறு அன்று ஜாலியன் வாலாபாக் தியாக மண்ணை உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அஞ்சலி செலுத்திட காண்பிக்க, திருமாறன், ராம்மோகன் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரையில் அமைந்துள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஜாலியன் வாலாபாக் தியாக மண்ணை தரிசிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக டிஜிபியிடம் திருமாறன், ராம்மோகன் தெரிவித்தனர். சந்திப்பின்போது பணகுடி பத்திரிகையாளர் வளவன், நெல்லை ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Jollianwablock Soldier Land: Delivery ,Digi , Jallianwablock, martial soil
× RELATED டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல்...